சிட்னித் தமிழ் அறிவகம் 10.08.1991ம் ஆண்டு Mount Druitt என்ற இடத்தில் "சிட்னித் தமிழ் தகவல் நிலையம்" என்ற பெயரில் University of Western Sydney நூலகர் திரு.மு.குணசிங்கம் என்பவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பின் 16.05.1992ம் ஆண்டு Strathfield ற்கு இடம் பெயர்ந்தது. 14.07.1992ம் ஆண்டு இந்நூலகம் "சிட்னித் தமிழ் அறிவகம்" எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுச் சட்டப்படி ஒரு ஸ்தபனமாக 29.09.1994ம் ஆண்டு பதிவுசெய்யப்பட்டது. போதிய பணவசதியின்மை, நூலகத்திற்கு உறுப்பினர்களைச் சேர்ப்பதிற் சிரம்ம், நூலகத்திற் பணிபுரிபதற்கு உதவியாளர்களைப் பெற்றுக்கொள்வதிலும் புதிய நூல்களை வாங்கிச் சேகரிப்பதிலும் ஏற்பட்ட இடர்பாடு ஆகியவற்றுக்கு முகம் கொடுத்துப் பல தமிழ் ஆர்வலர்கின் விடாமுயற்சியினாலும், கடின உழைப்பினாலும் மெல்ல மெல்லச் சிட்னித் தமிழ் அறிவகம் வளர்ச்சியடைந்தது. தமிழ் வாசர்களின் வரவு கூடியதால் ஏற்பட்ட இடவசதியின்மி காரணமாகச் "சிட்னித் தமிழ் அறிவகம்" 01.08.2004ம் ஆண்டு 56 Rochester Street Homebush ற்கு மாற்றப்பட்டு மீண்டும் 28.01.2004ம் ஆண்டு 54 The Cresent Homebush என்ற இடத்தில் நிலை கொண்டு பல வசதுகளுடன் இயங்கி வந்தது.
இருபது நூல்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நூலகம் இன்று 8000ம் வரையான நூல்களைக் கொண்ட நூலகமாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்த நூலகத்தை இன்னும் பெரிதாக விஸ்தரிக்க வேண்டும் என்று எண்ணிய சிட்னித் தமிழ் அறிவக உறுப்பினர்கள் சிட்னி முருகன் ஆலய நிர்வாக சபயினரிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கிச் சிட்னி முருகன் ஆலயச் சைவமன்ற உறுப்பினர்களும், நிர்வாகசபை உறுப்பிணர்களும்(2013ம், 2014ம் ஆண்டு) ஒருமனதோடு சிட்னி முருகன் ஆலயத்திற்குச் சொந்தமான ஒரு வீட்டினை மிகக்குறைந்த வாடகைக்குச் சிட்னி தமிழ் அறிவகத்திற்குத் தந்துதவியுள்ளனர்.
இதன் அடிப்படையில் 05.04.2014ல் இருந்து "சிட்னித் தமிழ் அறிவகம்" 191 Greatwestern Highway, Mays Hill என்ற இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. (சிட்னி முருகன் ஆலயத்திற்கு அருகாமையில்) சிட்னி வாழ் தமிழ் ஆர்வலர்க்கு இது ஒரு பொன்னாளாகும்.
தமிழ்மொழி அறிவு பண்பாடு, கலை, கலாச்சாரம் என்பவற்றைச் சிட்னி வாழ் தமிழ் மக்களிடையே வேரூன்றச் செய்து அவற்றை ஒரு வாழ் நெறியாக மட்டுமன்றிப் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் ஒரு கற்கை நெறியாகவும், ஆய்வுநெறியாகவும் வலரச்செய்ய வேண்டும். இது தவிர அவுஸ்ரேலியாவில் வாழும பிற மொழி பேசுபவர்களும் தமிழர்களின் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரங்கள் பற்றி களஞ்சியமாக வரலாற்றுச் சின்னமாகச் "சிட்னித் தமிழ் அறிவகம்" விளங்க வேண்டும் எனபதே எங்கள் அடிப்படை நோக்கமும் பேராவலுமாகும்.
The name of the Centre shall be Sydney Tamil Resource Centre, herein after referred to as the “Centre”.This Centre shall be referred to in Tamil as "Sydney Thamil Arivagam".
The provisions of the Constitution become operative from 15 th October 2000.
The objectives of the Centre shall be:
To achieve the above objectives, the Centre shall,
சிறுவர் முதல் முதியோர்வரை பயன்பெறக்கூடிய ஆயிரக்கணக்கான தமிழ் புத்தகங்கள், சஞ்சிகைகள் நிறைந்த அறிவகம்.