சிட்னி தமிழ் அறிவகத்தின் வருடாந்த கலாசார நிகழ்வான வசந்தமாலை இம்முறை 19/03/2017 அன்று Blacktown இல் அமைந்துள்ள Bowman Hall இல் அரங்கம் நிறைந்த நிகழ்வாக மிகச்சிறப்பாக நடந்தேறியது. ஹோம்புஷ் மற்றும் வென்ற்வேத்வில் தமிழ்ப் பாடசாலைகளின் மாணவர்கள் பாடிய தமிழ் மொழி வாழ்த்துடன் விழா ஆரம்பமாகியது. இவ்விழாவில் இரு நியூ சவூத்வேல் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தார்கள். அவர்கள் தமதுரையில் தமிழர்களின்கலாச்சாரத்தின் பெருமையையும் எமது விழுமியங்களைப் பற்றி புகழ்ந்துரைத்தார்கள்.தமிழர்களின் கடின உழைப்பு பற்றியும் குறிப்பிட்டிருந்தார்கள்.
இவ்விழாவை சிட்னியில் பிரபல்யாமான சங்கீத ஆசிரியரான ஸ்ரீமதி மாலதி சிவசீலனின் "சுருதிலயா" மாணவர்கள் வழங்கிய "இசை வேள்வி" எனும் கர்நாடக சங்கீத நிகழ்வும், பிரபல்ய நடன ஆசிரியையான ஸ்ரீமதி மிர்னாளினி ஜெயமோகனின் அபிநயாலயாமாணவர்கள் வழங்கிய "ஆடல் இன்பம்" எனும் நடன நிகழ்வும் அலங்கரித்தன. இவையாவும் முற்று முழுதாக சிட்னி வாழ் சிறார்களும், இளையோரும்இணைந்து வாழங்கியநிகழ்வுகளாகும். இது சிட்னி தமிழ் அறிவகத்தின் மிக முக்கிய நோக்கமான வருங்கால சந்ததியினரை எவ்வாறு அறிவகத்துடன் இணைப்பது எனபதற்கு ஒரு எடுத்துக் காட்டாகும். முக்கியமாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய பாடசாலை மாணவி எல்லோரினதும் பாராட்டைப் பெற்றார். இம்மாணவி உயர்தரப் பரீட்சையில் தமிழை ஒரு பாடமாக எடுக்கஇருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியாக இளையோரை ஊக்கிவிப்பதில் சிட்னி தமிழ் அறிவகம் தனக்கென தனியொரு இடத்தை வைத்திருக்கிறது.
சிட்னி தமிழ் அறிவகத்தின் வளர்ச்சிக்கு எமது வாழ்த்துகள்.